
இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டாரான பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, டிம்பிள் தம்பதியின் திருமணம் பற்றி சுவையான 10 தகவல்கள் வருமாறு,
1. டிம்பிள் கபாடியா பாலிவுட் நடிகர் ரிஷி கபூரை காதலித்தார். அவர்கள் காதல் முறிந்த பிறகு ராஜேஷ் கன்னா தன்னுடைய தீவிர ரசிகையான டிம்பிளை சந்தித்தார்.
2. ராஜேஷ் கன்னா தன்னைவிட 15 வயது சிறியவரான டிம்பிளை கடந்த 1973ம் ஆண்டு மார்ச் மாதம் ஜுஹூவில் உள்ள டிம்பிளின் குடும்ப பங்களாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
3. அவர்களது திருமண வரவேற்பு மும்பை ஜுஹூவில் உள்ள ஹோட்டல் ஹாரிசனில் நடந்தது. பாலிவுட் நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
4. டிம்பிள் தான் நடித்துக் கொண்டிருந்த பாபி படித்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் தேனிலவை மார்ச்சில் இருந்து ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.
5. திருமணம் முடிந்த கையோடு பாபி படப்பிடிப்புக்கு சென்றார் டிம்பிள். அதனால் அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளில் அவரது கையில் திருமணத்திற்காக போடப்பட்ட மெஹந்தி தெரியாதவாறு எடுத்தனர்.
6. ராஜேஷ்-டிம்பிள் தம்பதி ஐரோப்பாவுக்கு தேனிலவு சென்றனர். ஆனால் அவர்கள் தனியாக செல்லவில்லை. அவர்களுடன் தயாரிப்பாளர் ராஜ் பதீஜா, அவரது மனைவி நிர்மல் மற்றும் பால்தேவ் பதக் (நடிகைகள் ரத்னா, சுப்ரியா பதக்கின் தந்தை) ஆகியோரும் சென்றிருந்தனர்.
7. அவர்கள் ஐரோப்பாவில் தேனிலவு கொண்டாடியபோது டிம்பிளின் 16வது பிறந்தநாளுக்கு ராஜேஷ் ஹில்டன் ஹோட்டலில் பிரமாண்டமான பார்ட்டி கொடுத்தார். அதே ஆண்டு திருமணமான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் அப்போது லண்டனில் தேனிலவைக் கொண்டாடினர். அவர்களை ராஜேஷ் தனது மனைவியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். அவர்களும் அவரது அழைப்பை ஏற்று பார்ட்டிக்கு வந்தனர்.
8. ராஜேஷ் தனது மனைவியை செல்லமாக டிம்பி என்று அழைத்தார். அதே போன்று டிம்பிள் அவரை காக்கா என்றே அழைத்தார்.
9. 1984ம் ஆண்டு ராஜேஷும், டிம்பிளும் பிரிந்துவிட்டாலும் அவர்கள் விவகாரத்து பெறவில்லை.
10. இந்த பிரிவு நடந்து பல ஆண்டுகள் கழித்து ராஜேஷ் கன்னா கூறுகையில், உங்களுக்கு ஒன்று தெரியுமா, நான் இன்னும் எனது மனைவி டிம்பிளை காதலிக்கிறேன் என்றார்.
0 comments:
Post a Comment