
என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்தே மோகன்பாபு, லட்சுமி, விஷ்ணு, மனோஜ் ஆகியோரை நன்கு தெரியும். அவர்களது குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.
மோகன்பாபு என்னை மகளாகவே பாவிக்கிறார். லட்சுமி, மனோஜ், விஷ்ணு ஆகியோர் என்னை இளைய சகோதரியாகவே பார்க்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக என்னையும், மனோஜையும இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
இதற்கு முன்பு என்னைப் பற்றி அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன. அப்போதெல்லாம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டேன். இப்போது என் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் குடும்பத்துக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பப்படுவதால் இந்த விளக்கத்தை அளிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மனோஜ் எனது சகோதரர் போன்றவர். அவருடன் காதல் வயப்பட்டேன் என்றால் என்ன அர்த்தம்? எனக்கும், மனோஜுக்கும் சகோதர, சகோதரி உறவே தவிர வேற எந்த உறவும் கிடையாது.
இவ்வாறு டாப்ஸி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment