Join The Community

Friday, July 20, 2012

அதிவேகம் கொண்ட புதிய ஹுவேய் டேப்லெட்!!!



Huawei Mediapadஹூவேய் மீடியாபேட் 10 எப்எச்டி என்ற புதிய டேப்லெட்டை களமிறக்கப் போவதாக இந்த ஆண்டுத் தொடக்கத்திலேயே ஹூவேய் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த புதிய டேப்லெட் வருமா வராதா என்ற நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இந்த டேப்லெட் இந்திய சந்தையி்ல களமிறங்கும் என்று ஹூவேய் நிறுவனம் உறுதிய செய்திருக்கிறது.
இந்த ஹூவேய் டேப்லெட் பல ஏராளாமான தொழில் நுட்ப வசதிகளுடன் வகுகிறது. குறிப்பாக கே3 க்வாட் கோர் ப்ராசஸருடன் வரும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட் 10 இன்ச் அளவில் திரையுடன் வருவதால் இதில் வீடியோ பார்ப்பதற்கும் மற்றும் விளையாடுவதற்கும் சூப்பராக இருக்கும்.
இதன் கே3 ப்ராசஸர் என்விடியாவின் டேக்ரா 3 ப்ராசஸரை விட அதிக வேகத்தைக் கொடுக்கும். அதோடு இந்த டேப்லெட் இயங்குவதற்கு குறைவான மின் சக்தியே போதுமானது. இந்த டேப்லெட்டின் 2ஜிபி ரேமும் இதன் வேகத்தை இன்னும் அதிகரிக்கும்.
கேமராவைப் பொருத்தவரை இந்த டேப்லெட் 8எம்பி பின்பக்க கேமராவையும் அதே நேரத்தில் 1.3எம்பி முகப்புக் கேமராவையும் வழங்குகிறது. இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட் வரும் ஆகஸ்டில் சீனாவிலும், வரும் செப்டம்பரில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. விலையைப் பொருத்தவரை இந்த ஹூவேய் டேப்லெட் ரூ.25,000க்கு விற்கப்பட இருக்கிறது.

0 comments:

Post a Comment