Join The Community

Friday, July 20, 2012

விராத் கோஹ்லியுடன் காதலா?: நடிகை சாரா மறுப்பு



I Have Never Met Virat Kohli Sarah Jane Dias

விராத் கோஹ்லியை காதலிப்பதாக பேசப்பட்டு வரும் நடிகை சாரா ஜென் தியாஸ், அவரை நேரில் கூட சந்தித்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருப்பவர் விராத் கோஹ்லி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, நடிகை சாரா ஜென் தியாஸை ஒரு விருந்தில் வைத்து சந்தித்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு இருவரும் காதலர்களாக மாறி, அவ்வப்போது சந்தித்து பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விராத் கோஹ்லியுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரை நேரில் சந்தித்தது கூட கிடையாது என்று சாரா ஜென் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்த கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்து நான் களைத்து போய்விட்டேன். விராத் கோஹ்லி உடன் ஒரே அறையில் நான் தங்கவில்லை. மேலும் அவருடன் போனில் பேசுவதும் இல்லை. அவரை சந்திக்கவோ, கை குலுக்கவோ இல்லை.
இது குறித்து நான் செய்திகள் கேள்விப்படும் போதெல்லாம், எனக்கு கோபம் தான் வருகிறது. விராத் கோஹ்லி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருடன் எனக்கு எந்த உறவும் இல்லை.
தற்போது இந்தி மொழி மற்றும் ஜீப் ஓட்ட கற்று வருகிறேன். மேலும் மதுபான கடையில் சரக்கு விற்கும் பெண் வேடத்தில் அடுத்த படத்தில் நடிக்க உள்ளேன். இதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என்றார்.

0 comments:

Post a Comment