சித்திரையில் பூத்த செருந்தி மலரே....!
அக்கறையில் அணைக்கும் இத்தரை தேனே..!
நண்பா உனக்கு,
பிறந்த நாள் புது வாழ்த்துக்கள்.
தெருவோர சோடியம் விளக்கருகில்
சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும்
வான வேடிக்கையாய் - உங்கள்
இன்பம் இனிய வானில் உலவட்டும்.
தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும்
பச்சை இலையின் நரம்பில் நகரும்
நதியோட்டமாய் - உங்கள்
மகிழ்ச்சி ஜதிபாடட்டும்.
ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து
சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும்
சிறு துளி இனிப்பாய் - உங்கள்
வாழ்வு இனிக்கட்டும்.
ஆயிரம் அல்லிக்குள் ஒரு தாமரையாய்
ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய்
புல் தரையில் காலை பனிதுளியாய்
சிறப்புற்று சிரியுங்கள்...!
அக்கறையில் அணைக்கும் இத்தரை தேனே..!
நண்பா உனக்கு,
பிறந்த நாள் புது வாழ்த்துக்கள்.
தெருவோர சோடியம் விளக்கருகில்
சோடிக் கிளிகளின் கண்ணில் மின்னித் தெரிக்கும்
வான வேடிக்கையாய் - உங்கள்
இன்பம் இனிய வானில் உலவட்டும்.
தூரலில் நனைந்து தலையாட்டி தாலாட்டும்
பச்சை இலையின் நரம்பில் நகரும்
நதியோட்டமாய் - உங்கள்
மகிழ்ச்சி ஜதிபாடட்டும்.
ஒரே கூட்டுக்குள் சீருடை அணிந்து
சிரிக்கும் எறும்புடன் ஒட்டிக்கொள்ளும்
சிறு துளி இனிப்பாய் - உங்கள்
வாழ்வு இனிக்கட்டும்.
ஆயிரம் அல்லிக்குள் ஒரு தாமரையாய்
ஒருபக்க கவிதைக்குள் முதல் வரியாய்
புல் தரையில் காலை பனிதுளியாய்
சிறப்புற்று சிரியுங்கள்...!
1 comments:
gud kavidhi... like so much
Post a Comment