Join The Community

Monday, July 16, 2012

வில்லன் நடிப்பில் என்னை மிஞ்சிட்டீங்க.. - ரஜினியிடம் பாராட்டு பெற்ற சுதீப்


Rajinikanth Lauds Sudeep S Acting E

நான் ஈ படத்தில் வில்லன் நடிப்பில் என்னையே மிஞ்சிவிட்டீர்கள் என நடிகர் சுதீப்பை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றி கண்டுள்ள நான் ஈ மற்றும் ஈகா படங்களில் நானி, சுதீப், சமந்தா நடித்துள்ளனர். குறிப்பாக வில்லனாக கன்னட நடிகர் சுதீப்பின் நடிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
சமீபத்தில் நான் ஈ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக போட்டுக் காட்டினார் இயக்குநர் ராஜமவுலி. படத்தின் பல காட்சிகளை கைத்தட்டி ரசித்த ரஜினி, படம் முடிந்ததும் ராஜமவுலிக்கும் குழுவினருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
படத்தில் வில்லனாக நடித்துள்ள சுதீப்பையும் பாராட்டினார். ரஜினியின் பாராட்டு குறித்து ட்விட்டரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார் சுதீப்:
"படம் பார்த்த ரஜினி சார் தனக்கே உரிய வெடிச்சிரிப்புடன் 'நான்தான் பெஸ்ட் வில்லன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். ஆனா என்னை மிஞ்சிட்டீங்க...' என்று வாழ்த்தினார்!"

0 comments:

Post a Comment