Join The Community

Wednesday, July 11, 2012

கேரளாவில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலை மத்திய அரசு கையகப்படுத்த வேண்டும்: சரத் யாதவ்

புதுடெல்லி, ஜூலை 11-

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய நிலவறைகளில் இருந்து கடந்த ஜூலை மாதம் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொக்கிஷங்கள் வெளியே எடுக்கப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  பெருஞ்செல்வங்கள் நிறைந்துள்ள இந்த கோயிலின் நிர்வாகத்தை கேரளா அரசு ஏற்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வந்தனர். இதற்காக கேரளா ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் நிர்வாகத்தை ஏற்றுக்கொள்ள கேரளா அரசு மறுத்தது.


இந்நிலையில் ஐக்கிய ஜனதா கட்சி தலைவர் சரத் யாதவ் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் உள்ள கோயில்களின் வளர்ச்சிக்காக, சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்களை வைத்திருக்கும் கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோயிலை மத்திய அரசு கையகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவை மக்களின் வளர்ச்சிக்கும் உதவும். இதுபற்றி நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரவேண்டும். இதன்மூலம் இந்து மத வளர்ச்சிக்கு உதவிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

Post a Comment