Join The Community

Friday, July 13, 2012

யுவராஜ்சிங் வெறுக்கும் சிவப்பு நிறம்


யுவராஜ்சிங் வெறுக்கும் சிவப்பு நிறம்

 
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான யுவராஜ்சிங் நுரையீரல் பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பின்னர் சகஜ நிலைக்கு திரும்பி வருகிறார்.
 
இலங்கையில் செப்டம்பர் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க திட்டமிட்டு யுவராஜ்சிங் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
 
இந்த நிலையில் யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
முன்பு எனக்கு பிடித்தமான நிறம் சிவப்பாகும். ஆனால் எனது சிகிச்சையின் போது அடிக்கடி ரத்தத்தை பார்த்து, பார்த்து எனக்கு தற்போது சிவப்பு நிறத்தை பார்த்தாலே வெறுப்பு ஏற்படுகிறது. சிவப்பு கலர் எனக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.
 
சிகிச்சைக்கு பின்னர் கிரிக்கெட் ஆட்டத்தின் மீதான எனது அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. நோயில் இருந்து மீண்டு வந்துள்ள நான் இந்திய அணியில் இடம் பிடித்து முதல் ஆட்டத்தில் எப்போது ஆடுகிறேனோ? அது என்னை பொறுத்தமட்டில் மிகப்பெரிய சாதனையாகும்.
 
சிகிச்சையில் இருந்த நேரத்தில் எனக்கு மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. தற்போது என்னால் சிரமமின்றி சுவாசிக்க முடிகிறது. என்னால் சமோசா சாப்பிட முடியும். சிகிச்சையின் போது நான் உணவின் நறுமனத்தை நுகர முடிந்தது. ஆனால் சாப்பிடவில்லை.
 
தற்போது மற்றவர்களை போல் சகஜ நிலைமைக்கு திரும்பி இருப்பது எனக்கு நிம்மதி அளிக்கிறது. 6 மாதங்கள் வரை முழு ஓய்வில் இருந்த நான் மீண்டும் என்னால் விளையாட முடியும் என்று கற்பனை கூட செய்யவில்லை.
 
தற்போது எனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. பயிற்சியில் எனக்கு களைப்பு ஏற்படுவது கிடையாது. இலங்கையில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
 
இவ்வாறு யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment