Join The Community

Friday, July 20, 2012

கவர்ச்சிகரமான திரையை வழங்கும் ஆப்பிளின் அடுத்த ஐபோன்!



Apple's Next iPhone to Get Slimmer Screen
ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருப்பது ஐபோன்-5 ஸ்மார்ட்போன். ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போனை தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் அடுத்தாக வெளியிட இருப்பது ஐபோன் 5 ஸ்மார்ட்போன்.
சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்ப்பது சாம்சங் கேலக்ஸி நோட்-2 ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனும் இன்னும் வெளியாகவில்லை. இதனால் இந்த இரண்டு ஸ்மார்ட்போனும் வெளியாகும் சமயத்தில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன்-5 ஸ்மார்ட்போன், சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனையுவிட பெரிய திரையை கொண்டிருக்கும் என்று கருதப்படுகிறது. அது மட்டும் அல்லாது இந்த ஸ்மார்ட்போன் மெலிதான கவர்ச்சிகரமான திரையினை வழங்கும் என்று ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மெல்லிய திரை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிளின் நியூ ஐபேட் வெளியான சமயத்தில், அந்த டேப்லட் அதிகம் சூடாவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அதன் பிறகு ஆப்பிள் நிறுவனம் சரி செய்ததாகவும் மற்றொரு தகவல் வெளியானது. இது போன்ற குறைபாடுகள் ஏதும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் ஏற்படாது என்று தோன்றுகிறது.
ஏனெனில் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் உலகில் அதிகம் பெயர் பெற்று வருகிறது. இதனால் ஆப்பிள் நிறுவனம் வெளியிட இருக்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனில் எந்தவிதமான தொழில் நுட்ப கோளாறுகளும் இருக்க கூடாது என்பதில் ஆப்பிள் நிறுவனம் மிக கவனமாக இருக்கிறது போலும்.
மற்றபடி இன்னும் அறிமுகமாகாத இந்த ஸ்மார்ட்போன் பற்றி நுனுக்கமான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

0 comments:

Post a Comment