
இன்டெல் நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பால் ஒட்டேலினி ஒரு முக்கியமான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். அதாவது இன்டல் நிறுவனம் 20 விண்டோஸ் 8 டேப்லெட்டுகளையும் மற்றும் 140 புதிய அல்ட்ராபுக்குகளையும் விரைவில் களமிறக்க இருப்பதாக அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறார்.
விண்டோஸ் 8 இயங்குதளம் வெளி வந்தவுடன் இந்த 20 விண்டோஸ் 8 டேப்லெட்டுகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் இன்டல் களமிறக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்டலின் அல்ட்ராபுக்குகளும் வெளி வந்துவிடும் என்று தெரிகிறது.
விண்டோஸ் 8 டேப்லெட்டுகள் க்லோவ் சிப்செட்டைத் தாங்கிவரும். ப்ராசஸர் வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கை ஆற்றி வருகிறது இன்டல் நிறுவனம். இன்டலின் அடுத்த தலைமுறைக்கான ஐவி பிரிட்ஜ் கோர் ப்ராசஸரில் அமைந்த நோட்புக்குகள் படையெடுத்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் இன்டல் வழங்க இருக்கும் புதிய விண்டோஸ் 8 டேப்லெட்டுகள் மற்றும் அல்ட்ராபுக்குகளும் மக்களைப் பெரிதும் கவரும் என நம்பலாம்.
0 comments:
Post a Comment